JEE – முதல்நிலைத் தேர்வு மையங்களின் விவரம் வெளியீடு

  ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். 2023-24 கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதல்நிலைத் தேர்வுகடந்த ஜனவரியில் நடத்தப்பட் டது. இதைத் தொடர்ந்து ஜேஇஇ 2-ம் கட்ட முதல்நிலைத் தேர்வு ஏப்.6 முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ள நகரங்களின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அந்த விவரங்களை jeemain.nta.nic.in என்றஇணையதளத்தில் சென்று மாணவர்கள் அறிந்து … Read more

புதிய கல்லூரிக் கல்வி இயக்குநர் நியமனம்

  தமிழகத்தில் உயர்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கலை, அறிவியல் கல்லூரிகளை கல்லூரிக் கல்வி இயக்குநரகம் கண்காணித்து வருகிறது. ஊட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வராக இருந்த எம்.ஈஸ்வர மூர்த்தி, முழு கூடுதல் பொறுப்பில் கல்லூரிக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டார். இவர் பணிக்காலம் முடிந்து நேற்று முன்தினம் ஒய்வுபெற்றார். இதையடுத்து புதிய கல்லூரிக் கல்வி இயக்குநராக, திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி முதல்வர் ஜி.கீதாவை (முழு கூடுதல் பொறுப்பு) நியமனம் செய்து உயர் … Read more

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க, பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக, பள்ளிக் கல்வித் துறை அனுமதி அளிக்கவில்லை. இதுகுறித்து, சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில், பல்வேறு வழக்குகளும் நடந்தன. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி, அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் காலியிடங்களை நிரப்பலாம் என, பள்ளிக் கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குனரகம் … Read more