அதிகரிக்கும் கொரோனா தொற்று டெல்லியில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடல்


 

டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள், ஜிம்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தினசரி உயர்ந்து வருகிறது. உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில்,  மஞ்சள் எச்சரிக்கை அறிவிப்பை முதல்வர் கெஜ்ரிவால் வெளியிட்டார்.

இனிமேல், இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் மூடப்படும். ஜிம், ஸ்பா, யோகா, நீச்சல் பயிற்சி உள்ளிட்டவை செயல்பட உடனடி தடை விதிக்கப்படுகிறது. 

இந்நிலையில் டெல்லியில் முதுகலை மருத்துவபடிப்புக்கான நீட் கவுன்சிலிங் ஒத்திவைக்கப்பட்டதை கண்டித்து டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று மன்சுக் மாண்டவியா கேட்டுக்கொண்டுள்ளார்.


Leave a Comment