அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் விலையில்லா சீருடைகளை மாணவர்கள் முறையாக அணிந்து வர வேண்டும் – பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!


 காஞ்சிபுரம் , செங்கல்பட்டு , சென்னை மற்றும் வேலூர்
ஆகிய மாவட்டகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும்
விலையில்லா சீருடைகளை பெரும்பான்மையான மாணவர்கள் பள்ளிக்கு முறையாக அணிந்து
வருவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு வழங்கும் விலையில்லா சீருடைகளை
பெற்றும் அவற்றை பயன்படுத்தாத அரசு உதவி பெறும் பள்ளிகளில்
சத்துணவுத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு
வரை பயிலும் மாணவ / மாணவியர்கள் தினந்தோறும் அரசு வழங்கிய சீருடைகளை
அணிந்து வர அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


Leave a Comment