ஆசிரியர் – மாணவர் உறவு மேம்பட பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு.


கோடை
விடுமுறையில், மலை சுற்றுலா தலங்களில் சிறப்பு பயிற்சி முகாம்கள்
நடத்துவது உட்பட, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக, பள்ளிக்
கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

* மாதந்தோறும் பெற்றோர் – ஆசிரியர் – மாணவர் சந்திப்பு, பள்ளி மேலாண்மை குழுவின் உறுதுணையுடன் நடத்தப்படும்

* இலக்கியம், கவின்கலை, சூழலியல் சார்ந்த மன்றங்கள், பள்ளிகளில் புதுப்பிக்கப்பட்டு செயல்படுத்த வழிவகை செய்யப்படும்

* விளையாட்டு, நுண்கலை, இலக்கியம் என, மாணவர்களின் ஆர்வத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்

*
கலைத் திருவிழாக்களும், விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படும். இவற்றில்
சிறந்து விளங்கும் மாணவர்கள், கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்

*
மாணவர்களின் தனித் திறமைகளை மெருகேற்ற, மலை சுற்றுலா தலங்களில், கோடை
கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்தப்படும். சூழலியல்,
தலைமைத்துவம், மனித உரிமை, சமூக நீதி, பெண்ணியம் மற்றும் எதிர்காலவியல்
குறித்து பயிற்சிகள் அளிக்கப்படும்

*
வரும் கல்வியாண்டின் முதல் வாரத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளி மாணவர்களுக்கு, மன நலம், குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்தல்,
போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் தடுத்தல், தன்சுத்தம் பேணுதல் போன்ற
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்

* செயல்வழிக்
கற்றலை ஊக்குவிக்க, பள்ளிதோறும் காய்கறி தோட்டங்கள் ஏற்படுத்தப்படும்.
அவற்றில் விளையும் காய்கறிகள், பழங்கள், கீரைகள், சத்துணவில்
பயன்படுத்தப்படும்

* மாநில சதுரங்கப் போட்டிகள்
நடத்தப்பட்டு, வெற்றியாளர்கள் சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் வீரர்களுடன்
கலந்துரையாட, ஏற்பாடுகள் செய்யப்படும்

* அறிவியல் ஆர்வம்
உள்ள மாணவர்களுக்காக, ‘ஸ்டெம்’ எனப்படும் அறிவியல் தொழில்நுட்பம்,
பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த, புதிய திட்டம் விரைவில்
அறிமுகப்படுத்தப்பட உள்ளது

* தேவைப்படும் மாணவர்களுக்கு, மனநல ஆலோசனை வழங்கப்படும்

*
மாணவர்களின் நல்லியல்புகளை மேம்படுத்தவும், நற்பண்புகளை உருவாக்கவும்,
பெற்றோரும், பள்ளியும், அரசும் இணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது.
அத்தகைய இணைப்பை உறுதிப்படுத்த, தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அமைச்சர் அறிவித்துள்ளார்.


Leave a Comment