ஆசிரிய நண்பர்கள் அனைவருக்கும் கல்விச்செய்தியின் ஆசிரியர் தின வாழ்த்துகள்.

[ad_1]

அறிவுப்பிதாக்களுக்கு…

குறள் மட்டுமல்ல எங்கள் குரல்களும் அகரம் நவில நவின்றோதிய நல்லாத்மாக்களே

நீங்கள் கடவுளினும் மேலானவர்கள்

கண்ணெதிர் கடவுளானவர்கள்

நீங்கள் இருளகற்றிய கதிரவன் கதிர்கள்

ஏழ்மை விலக எழுத்தறிவிப்பவர்கள்

உங்கள் திட்டும் கொட்டும் 

எங்களுக்கு நல்வழியைச் சுட்டும்

 மறுகணமே

அனுசரணையோடு

அன்பும் கனிவும் இரண்டறக் கலந்தே கொட்டும்

நீங்கள் பள்ளிக்கூடத்துக் கதாநாயகர்கள்

நல்லன மட்டுமே நயமுடன் போதிக்கும் சமூக காவலர்கள்

முகம் கண்டே அகம் உணரும் அதிசய பிறவிகள்

தோள் மீது ஆதரவாய் படரும் உங்கள் கைகளே எங்களின் பெருவலி நீக்கி

அன்பான தருணங்களில்

பேரன்பு காட்டி

கண்டிக்கும் நிமிஷங்களில் 

கனிவை உள்வைத்து கடுமை காட்டி

எங்கள் உயர்வையே எதிர்ப்பார்த்துக்

காத்துக்கிடக்குற வாழ்க்கைக்காட்டி

உங்களின் பாதிப்பின்றி

ஒருபோதும் இல்லை எங்கள் வாழ்வியல்

தாய்க்கு நிகராய்

தந்தையின் உருவாய்

இருக்குறீர்

எப்போதும் எங்கள் வணக்கத்திற்குரிய குருவாய்

தன்னலமேதுமில்லா

தகைமையாளர்களே

நீங்கள் விரல்பற்றி எழுதிய நாட்கள்

எங்களுக்குப் பசுமரத்தாணி

தொடுதிரை வகுப்பெடுத்து சமூகத்தில் உயர வைத்த ஏணி

உம்மை விட உச்சம் சென்றாலும் உச்சுக்கொட்டாத நல்லாத்மா

உமை இகழும் ஈனர்களை ஒருக்காலும் மன்னிக்கவே மாட்டார் உலகின்

பரமாத்மா

மனிதம் உயர்த்தும்

ஆசிரிய உள்ளங்களே

மலிந்த இருள் இன்னும் அகல எப்போதும் நீங்கள் தேவை

இன்றுபோல் தொடரட்டும் என்றென்றும் 

உங்கள் சேவை

உங்கள்

எழுதுகோல்கள் தான்

எப்போதும் தவறுகளைத் திருத்தும்…

எங்கள் வாழ்வை உயர்த்தும்

விமர்சனங்களில் ஒடிபவர்கள் அல்லர் நீங்கள்

நீங்கள் சனங்களின் காவலர்கள்

உங்கள் அனைவருக்கும்

என் வாழ்த்து மலர்ச்செண்டு

நேர்மைத்திலகங்களே

தொடர்ந்து அறியாமை இருளகற்றுங்கள்

பற்றிப்

பரவட்டும் பாரெங்கும் அறிவு வெளிச்சம்

இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்

தோழமையுடன்,

சீனி.தனஞ்செழியன்,

முதுகலைத் தமிழாசிரியர்,

அஆமேநிப, திருவலம்.

வேலூர் மாவட்டம்.

[ad_2]

Leave a Comment