இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா…! 24 மணி நேரத்தில் 43,509 பேர் பாதிப்பு: 640 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்



நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.22 லட்சத்தை தாண்டியுள்ளது. அதே போல், இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.15 கோடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
* புதிதாக 43,509 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,15,28,114 ஆக உயர்ந்தது.
* புதிதாக 640 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,22,662 ஆக உயர்ந்தது.
* தொற்றில் இருந்து ஒரே நாளில் 38,465 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,07,01,612 ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,03,840 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* இந்தியாவில் இதுவரை 45,07,06,257 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


Leave a Comment