இன்று (28.12.2021) நடைபெறும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நேர மாற்றம் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்.


அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் பயிற்சி மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் 28.12.2021 அன்று சென்னை , கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில் காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

 ஆனால் மேற்கண்ட அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டத்திற்கான நேரம் மாற்றப்பட்டு காலை 9.00 மணிக்கு துவங்க உள்ளதால் அனைத்து அலுவலர்களும் காலை 9.00 மணிக்கு முன்னதாகவே கூட்ட அரங்கிற்கு வருகை புரிந்திட அறிவுறுத்தலாகிறது.

 26.12.2021 அன்று இவ்வியக்கத்திலிருந்து அனுப்பப்பட்ட புள்ளி விவர படிவங்களை முதன்மைக் கல்வி அலுவலர்களே புத்தக வடிவில் தயார் செய்து எடுத்து வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Comment