கரோனா கால கற்றல் இடைவெளி மீட்பு குறித்து ஆசிரியர்கள் கலந்துரையாடல்!


கொரோனா கால கற்றல் இடைவெளி மீட்பு குறித்து ஆசிரியர்களுடன் உரையாடல் நிகழ்வும் மற்றும் பரிசளிப்பு விழா

 இராமநாதபுரம் மேஜிக் பஸ் பவுண்டேசன் மற்றும் அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் குழு (A3 குழு). இணைந்து இவ்விழாவை நடத்தியது

விழா தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் ஆரம்பித்த விழாவில், கல்வியாளர் முனைவர்.மோகனா சோமசுந்தரம் அவர்கள் தலைமை தாங்கினார் .

சிறப்பு அழைப்பாள்கள் 

ராமநாதபுரம் மாவட்ட உதவி திட்ட இயக்குநர்(SSA).இரவி 

மற்றும் 

அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர் குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் உமா மகேஸ்வரி .ஆகியோர். 

விழாவில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

விழாவில் கொரோனா காலத்திற்கு பிறகான கல்வியின் தாக்கம்,கல்வியின் இழப்பு போன்றவை குறித்து கலந்துரையாடல் செய்து கருத்துக்கள் பெறப்பட்டன.

பள்ளி ஆசிரியர்களுக்கான பொறுப்புகள், பள்ளி வளாகத்தைக் கடந்து சமூகத்தில் குழந்தைகளுக்கான சூழல்களை உணர்ந்து கூடுதலாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து கருத்துப் பரிமாற்றம் நிகழ்ந்தது.

விழாவில் 15 நல்லாசிரியர் பெருமக்களுக்கு விருதுகள் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்

இறுதியில் நாட்டுப்பண்ணோடு விழா இனிதே முடிவுற்றது….


Leave a Comment