குடியரசு தினத்தன்று நடைபெற இருக்கும் கிராம சபை கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை பகிர்ந்து கொள்ள SPD உத்தரவு. January 21, 2023 by Prabu பள்ளிகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதற்காக கிராம பஞ்சாயத்துகளில் ஐந்து நிலைக்குழுக்களில் ஒன்றாக கல்விக்குழு செயல்படுகிறது . இக்கல்விக்குழுவில் பள்ளி வளர்ச்சிக்கான தீர்மானங்களை நிறைவேற்றுவதன் மூலம் பள்ளி வளர்ச்சிக்கு கிராம பஞ்சாயத்துகளின் பங்களிப்பை முழுமையாக பயன்படுத்த முடியும் . எனவே . கிராம சபை கூட்டங்களில் பள்ளி வளர்ச்சி கற்றல் கற்பித்தல் உட்கட்டமைப்பு மாணவர் பாதுகாப்பு . இடைநிற்றல் தொடர்பான பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை பகிர்ந்துகொள்வது அவசியம் , எனவே ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெற இருக்கும் கிராம சபை கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை பகிர்ந்து கொண்டு விவாதிப்பது தொடர்பாக கீழ்க்கண்டவழிமுறைகளைப் பின்பற்றி நடத்த அறிவுறுத்தப்படுகிறது. SMC Resolution sharing in 26-Jan Grama Sabha-reg