கொரோனா காலகட்டத்தில் மாணவர்கள் நலன்கருதி கேள்வித்தாள் விலையில்லாமல் வழங்க ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை!


 

கொரோனா காலகட்டத்தில் மாணவர்கள் நலன்கருதி  கேள்வித்தாள் விலையில்லாமல் வழங்கவேண்டும். தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.

மாநிலத்தலைவர்

 பி.கே.இளமாறன்

அறிக்கை. 

   கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்து நிம்மதியாக வாழும் சூழ்நிலையினை உருவாக்கிய மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

     மாணவர்களின் பாதுகாப்புகருதியும் 18 மாதங்கள் முடங்கிப்போன கல்வியினை மீட்டெடுக்கும் வகையில் இல்லம் தேடிக்கல்வி  திட்டம்தொடங்கி இந்தியாவிற்கே முன்மாதிரியாக அமைந்துள்ளது என்றால் அது மிகையில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களிருந்து தான் அரசுப்பள்ளிக்கு வருகிறார்கள். அச்சூழலைக்கருதிதான் தரமானகல்வி பல்வேறு சலுகைகளுடன் இலவசமாக அரசு வழங்கிவருகிறது. மேலும் தற்போது தான் வாழ்வாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவரும் நிலையில் மாணவர்களின் தேர்வுகட்டணம் வசூலிப்பது வேதனையானது. தொகை சிறியதென்றாலும் சுமைதான். தற்போது 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்புவரை 25 ரூபாயும் 9,10 வகுப்புகளுக்கு 30 ரூபாயும் 11,12 ஆம் வகுப்புகளுக்கு 35 ரூபாயும் பணம் மாணவர்களிடத்திலிருந்து பெறும் சூழலில்லை.அரசே  கேள்வித்தாள்களை விலையில்லாமல் வழங்கி உதவும்படி மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்.

 பி.கே.இளமாறன்

மாநிலத்தலைவர்

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்

98845 86716


Leave a Comment