தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாத கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – அமைச்சர் தகவல்!

[ad_1]

 

தமிழகத்தில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் பல்வேறு கட்டுப்பாடு நெறிமுறைகளுடன் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மாணவர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கல்லூரிகளில் தடுப்பூசி:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மே மாதம் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதில் முதற்கட்ட நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வழிக்கல்வி நடைமுறைக்கு வந்தது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது. மறுபுறம் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளும் துரிதமாக நடைபெற்றது.

இவற்றின் விளைவாக தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளது. இதனால் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதனிடையே பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளி, கல்லூரிகள் செப்.1 முதல் திறக்கப்படும் என பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பின்னர் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி 9 முதல் 12ம் வகுப்பு வரையிலும் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கி உள்ளன. தினசரி மாலை 3.30 மணி வரையில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற உள்ளது.

இந்நிலையில் கல்லூரிக்கு வரும் மாணவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என உயர்கல்வித்துறை அறிவுறுத்தி இருந்தது. தற்போது இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறுகையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரிகளிலேயே தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை. அனைவரும் கிருமிநாசினி பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்த பின்னர், முகக்கவசம் அணிந்து வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார்.

[ad_2]

Leave a Comment