நாளை முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை


 

பள்ளி ஆண்டு இறுதி தேர்வுகள் இன்று முடிகின்றன. நாளை முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள், கடந்த மாதம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. மற்ற வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு மற்றும் மூன்றாம் பருவ தேர்வுகள், 18ம் தேதி முதல் நடத்தப்பட்டன. இன்றுடன் அனைத்து வகுப்புகளுக்குமான தேர்வுகள் முடிகின்றன.

நாளை முதல், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது. மீண்டும் ஜூன் 1ல் பள்ளிகளை திறக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கோடை வெயிலின் தாக்கத்துக்கு ஏற்ப, பள்ளி திறக்கும் தேதியில் மாற்றம் இருக்கும் என தெரிகிறது.


Leave a Comment