நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய வழக்குகள் தள்ளுபடி: திட்டமிட்டப்படி செப்.12ல் நீட் தேர்வு.

[ad_1]

  நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் இந்த ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கான தேசிய நுழைவு மற்றும் தகுதி தேர்வான நீட் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்தது. விண்ணப்பங்கள் அனுப்பும் பணி கடந்த ஜூலை 13ஆம் தேதி தொடங்கியது.

விண்ணப்பங்கள் அனுப்புவது, விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்வது, விண்ணப்பக்கட்டணம் செலுத்துவது என அனைத்து பணிகளும் ஆகஸ்ட் 14ஆம் தேதியோடு முடிந்துவிட்டது. மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வு நடக்கும் இடங்களின் எண்ணிக்கை 155ல் இருந்து 198ஆகவும் உயர்த்தப்பட்டது. இதனிடையே இதர தேர்வுகளும் செப்டம்பர் 12ஆம் தேதியில் நடைபெறுவதால் நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பலர் வழக்குகளை தொடர்ந்தனர்.

இதனை விசாரித்த நீதிபதிகள் நீட் தேர்வை 16 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர் என்றும் ஒருசில மாணவர்களின் வேண்டுகோள்களுக்கு இணங்க அதனை ஒத்திவைக்க முடியாது என்றும் கூறினர். தேவையெனில் மனுதாரர்கள் தேசிய தேர்வுகள் முகமையிடம் முறையிடலாம் என்று நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர். இதனால் திட்டமிட்டப்படி செப்டம்பர் 12ஆம் தேதியன்று நீட் தேர்வு நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

[ad_2]

Leave a Comment