பகுதி நேர ஆசிரியர்கள் உண்ணாவிரதம்!


தமிழக அரசு பள்ளிகளில், 12 ஆண்டுகளுக்கு முன், பகுதி நேர சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள், வாரத்தில் மூன்று அரை நாட்கள் பணியாற்றுகின்றனர்.

ஓவியம், தையல், இசை, கணினி, தோட்டக்கலை, கட்டடக்கலை உள்ளிட்ட தொழிற்கல்வி பாடங்கள் நடத்தும், பகுதி நேர ஆசிரியர்களுக்கு, மாதம், 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. மே மாதம் கோடை விடுமுறை என்பதால், அந்த மாதத்தில் சம்பளம் வழங்கப்படுவதில்லை.

இந்நிலையில், தங்களுக்கு அனைத்து வேலை நாட்களிலும் பணி வழங்குமாறும், பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்குமாறும் கோரி, சென்னை டி.பி.ஐ., வளாகத்தில், நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கி உள்ளனர


Leave a Comment