பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 42,024 மாணவர்கள் ஆப்சென்ட் – பள்ளிக் கல்வித்துறை தகவல்


இன்று தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 42,024 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

 ஏற்கனவே நேற்று தொடங்கிய பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 32 ஆயிரம் பங்கேற்காத நிலையில், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு தொடங்கியது. 

இதில் 3,936 தேர்வு மையங்களில் 9.55 லட்சம் பேர் தேர்வு எழுதவிருந்த நிலையில், 42,024 மாணவர்கள் ஆப்சென்ட் என தெரியவந்துள்ளது.

இவ்வளவு மாணவர்கள் பொதுத் தேர்வில் பங்கேற்காமல் இருப்பது பள்ளிகளில் இடை நிற்றல் அதிகரிக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


Leave a Comment