பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 08.01.22


 திருக்குறள் :

பால்:பொருட்பால்


இயல்: கூழியல்


அதிகாரம்: பொருள் செயல் வகை


குறள் எண்: 758


குறள்:
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை.

பொருள்:
தன் கைப்பொருளைக்கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது யானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்கிக் கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப் போன்று பாதுகாப்பானது.


பழமொழி :

Good or bad, it doesn’t come from others.


தீதும் நன்றும் பிறர் தர வாரா.

இரண்டொழுக்க பண்புகள் :

1. ஒலியாக இருக்க வேண்டும் எதிரொலியாக அல்ல எனவே எனது தனித்தன்மை எப்போதும் இழக்க மாட்டேன்.


2. ஆயத்தமே ஆயுதம் எனவே எப்போதும் எந்த காரியம் செய்யும் முன்பும் ஆயத்தமாகி செல்வேன்

பொன்மொழி :

மரங்களில் பழங்கள்
இருந்தால் தான் பறவைகள்
தேடி வரும் அது போல தான்
பல உறவுகளும் உன்
வாழ்க்கையில் உயர்வு
இருந்தால் தான் உன்னை
தேடி வருவார்கள்.___ராமகிருஷ்ண பரமஹம்சர்


பொது அறிவு :

1. நாகாலாந்தில் எத்தனை புதிய மாவட்டங்கள் உருவாகிறது? 

3 மாவட்டங்கள். 

2. இந்திய ரானுவத்தில் தகவல் பகிர்வுக்கு அறிமுகப்படுத்தியுள்ள புதிய மொபைல் செயலி எது? 

அசிக்மா செயலி.

English words & meanings :

Pool – a small body of water, சிறு நீர் தேங்கியிருக்கும் பகுதி, 

Pool – sharing resources like car, வளங்களை பகிர்ந்து கொள்ளுதல்

ஆரோக்ய வாழ்வு :

கணினி யுகம் :

Ctrl + Alt + X – Clear target segment. 

Alt + – – Current segment Leverage

ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங்ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking, ஜனவரி 8 , 1942 -14 மார்ச்சு 2018)[3] ஆங்கிலேய கோட்பாட்டு அறிவியலாளரும்அண்டவியலாளரும், நூலாசிரியரும் ஆவார். இவர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் கோட்பாட்டு அண்டவியல் மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.[4][5] இவர் உரோசர் பென்ரோசுடன் இணைந்து பொதுச் சார்புக் கோட்பாட்டில் புவியீர்ப்பு அருநிலைத் தேற்றங்களை நிறுவியமை, ஆக்கிங்கு கதிரியக்கம் என அழைக்கப்படும் கருந்துளைகளின் கதிர்வீச்சு உமிழ்தலை எதிர்வுகூறியமை போன்ற அறிவியல் ஆய்வுகளுக்காகப் பெரிதும் அறியப்படுகிறார். இவரே முதன் முதலில் அண்டவியலுக்கான கோட்பாட்டை உருவாக்கி, பொதுச் சார்புக் கோட்பாடு, குவாண்டம் இயங்கியல் ஆகியவற்றின் மூலம் விளங்கப்படுத்தினார். குவாண்டம் இயங்கியலின் பல-உலகங்களுக்கான விளக்கத்திற்குத் தீவிர ஆதரவாளராக விளங்கினார்.

நீதிக்கதை

யார் வள்ளல்?

முன்னொரு காலத்தில் பொதிகை மலையை மாறன் என்ற அரசன் ஆண்டு வந்தான். வாரி வழங்கும் வள்ளலாக இருந்த அவன் புகழ் எங்கும் பரவியது. மற்றொரு நாட்டின் மன்னனான குணசீலன் என்ற மன்னன் மாறனைப் பற்றி கேள்விப்பட்டான். சிறிய பகுதியை ஆளும் மாறனுக்கு இவ்வளவு நற்பெயரா? நான் அவனைவிட வாரி வழங்கி பேரும் புகழும் பெற வேண்டும் என்று நினைத்தான். அதனால் தன்னுடைய பிறந்த நாளன்று மக்களுக்கு பரிசுகளை வாரி வழங்கப் போவதாக அறிவித்தான். மன்னனின் பிறந்த நாள் வந்தது. பரிசு பெறுவதற்காக நிறைய பேர் அரண்மனை முன்பாக கூடினர். அங்கிருந்த மேடையில் நின்றபடி ஒவ்வொருவருக்கும் பரிசு வழங்கிக் கொண்டிருந்தான் மன்னன். 

அப்போது தெற்கு வாயில் வழியாக மூதாட்டி ஒருவர் வந்தார். அவன் முன் கை நீட்டினாள். அவனும் பரிசு தந்து அனுப்பினான். சிறிது நேரம் சென்றது. மேற்கு வாயில் வழியாகவும் அதே மூதாட்டி வந்தாள். அவன் முன் கையை நீட்டினாள். மீண்டும் பரிசு பெற அவர் வந்திருக்கிறார் என்பதை அவன் தெரிந்து கொண்டான். அவருக்குப் பரிசு தந்து அனுப்பினான். மூன்றாம் முறையாக அந்த மூதாட்டி வடக்கு வாயில் வழியாக வந்தாள். கையை நீட்டினாள். இந்த மூதாட்டி திரும்பவும் வந்திருக்கிறாளே என்று முகத்தைச் சுளித்துக் கொண்டான். பரிசு கொடுக்க விரும்பமில்லாமல் வெறுப்புடன் அந்த மூதாட்டிக்கு பரிசு தந்து அனுப்பினான்.

திரும்பத் திரும்பத் தான் வருவதை அரசர் தெரிந்து கொண்டார். அதனால்தான் வெறுப்பைக் காட்டுகிறார் என்பது அவளுக்குப் புரிந்தது. இருந்தும் அவள் நான்காம் முறையாகக் கிழக்கு வீதி வழியாக வந்தாள். அரசனின் முன் கையை நீட்டினாள். அவளைப் பார்த்ததும் அவனால் கோபத்தை அடக்க முடியவில்லை. மூதாட்டியே! நீ எத்தனை முறைதான் பரிசு பெற்றுச் செல்வாய்? என்னை ஏமாளி என்று நினைத்துக் கொண்டாயா? உனக்குப் பரிசு ஏதும் தர மாட்டேன் என்று அவளை விரட்டினான்.

அங்கிருந்து செல்லாத அவள், அரசே! உங்களைப் போலவே பொதிகை மலை அரசர் மாறனும் பிறந்தநாள் பரிசு வழங்கினார். அவரிடம் நான் திரும்பத் திரும்பப் பதினாறு முறை சென்று கையை நீட்டினேன். என்னைத் தெரிந்ததாகவே அவர் காட்டிக் கொள்ளவில்லை. ஒவ்வொரு முறையும் சிரித்த முகத்துடன் பரிசு தந்து அனுப்பினார். ஆனால், நீங்களோ நான் மூன்றாவது முறை வந்தபோதே கோபத்தைக் காட்டினீர்கள். நான்காவது முறை இல்லை என்றே விரட்டுகிறீர்கள் என்றாள். இதைக் கேட்ட அவன் தன்னால் மாறனைப் போல வள்ளலாக முடியாது என்பதை அறிந்து கொண்டான்.

நீதி :

தானம் செய்வதற்கு நல்ல மனம் வேண்டும்.

இன்றைய செய்திகள்

08.01.22

◆தமிழகத்தின் 24,345 தொடக்கப் பள்ளிகளிலும் ‘ஸ்மார்ட் கிளாஸ்’ எனப்படும் திறன்மிகு வகுப்பறைகள் தொடங்கப்படும். அரசுப் பள்ளிகளின் வரலாற்றில் இது ஒரு மாபெரும் கல்விப் புரட்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

◆திண்டுக்கல், தேனி, தருமபுரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் புதிதாக 4 போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

◆நாகாலாந்து மலைத்தொடர்களில் அரியவகை படைச் சிறுத்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லை என நினைக்கப்பட்ட இந்த வகை சிறுத்தை இனம், காட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமரா பதிவின் மூலம் இந்திய மலைத்தொடர்களில் இருப்பது உறுதியாகியுள்ளது என வனவிலங்கு ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

◆நடப்பாண்டு மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியுள்ள உச்ச நீதிமன்றம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27 சதவீத இடஒதுக்கீட்டையும் உறுதி செய்து இடைக்கால உத்தரவிட்டுள்ளது.

◆உலக அளவில் கரோனா தொற்று கடந்த வாரத்தில் 71 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம், உயிரிழப்பு 10 சதவீதம் குறைந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

◆சர்வதேச டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா நாடியா கிச்னோக் ஜோடி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.

Today’s Headlines

 Prepared by

Covai women ICT_போதிமரம்


Leave a Comment