பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 15.09.21

[ad_1]

  திருக்குறள் :

அதிகாரம் 12 நடுவுநிலைமை 

குறள் எண்-114. 

 தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப் படும்.

பொருள்: ஒருவர் நேர்மையானவரா அல்லது நீதி தவறி ,நெறி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோ தான் நிர்ணயிக்கப்படும்.

பழமொழி :

A good when lost is valued most.


நிழலின் அருமை வெயிலுக்குப் போனால் தான் தெரியும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. தனக்கென்று நீர் வைத்துக் கொள்ளாத ஆறு, கல்லெறி பட்டாலும் பழம் தரும் மரங்கள்.

 2. இவை எனக்கு கற்றுத் தருவது சுயநலமில்லாத வாழ்க்கை

பொன்மொழி :

இளம் வயதில் நாம் நம் கடமையை சரியாகச் செய்வோம் எனில் முதுமையில் அதனால் கிட்டும் பலனை யாராலும் தடுக்க முடியாது.       ———–சுவாமி விவேகானந்தர்.

பொது அறிவு :

1.மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்படும் உடல் பகுதி எது? 

கல்லீரல்.

2.பயோரியா நோயினால் பாதிக்கப்படும் உடல் பகுதி எது?

பற்கள்.

ஆரோக்ய வாழ்வு :

*முகம் பளிச்சிட சில டிப்ஸ்*

1)கற்றாழை: சருமத்தை குளிரூட்டும். சருமத் துளைகளை குறைப்பதால் எண்ணெய் சுரப்பது குறையும். கற்றாழை கூழ் எடுத்து சிறிது நேரம் குளிரவைத்து பிறகு முகத்தில் தடவுங்கள். 30 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள்.

2)எலுமிச்சை: வைட்டமின் சி கொண்ட எலுமிச்சையில் பாக்டீரியாவை எதிர்க்கும் தன்மை உள்ளது. இதனால் முகத்தில் எண்ணெய் வடிவதை தடுக்க எலுமிச்சை உதவுகிறது. எலுமிச்சை சாறை நீருடன் கலந்து, பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி 20-30 நிமிடங்கள் விட்டு கழுவி

3)தக்காளி: இறந்த சரும அணுக்களை அகற்றி மிகுதியான எண்ணெயை இழுத்துக் கொள்கிறது. இரண்டாக வெட்டிய தக்காளியை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும்.

கணினி யுகம் :

Ctrl +z — undo .

Ctrl + K– insert hyperlink.


செப்டம்பர் 15:

மறைமலை அடிகள் அவர்களின் நினைவுநாள்  




மறைமலை அடிகள் (சூலை 151876 – செப்டம்பர் 151950) புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர். சிறப்பாக தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர்


நீதிக்கதை

கிணற்றில் விழுந்த நரி
ஒரு நாள் ஒரு நரி கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. விழுந்த அந்த நரி, யாராவது வந்து தன்னை காப்பாற்றுவார்கள் எனக் காத்திருந்தது. ஆனால், ஒருவரும் அந்தப் பக்கம் வரவேயில்லை. அதனால், சாப்பிடவும் முடியாமல், தூங்கவும் முடியாமல் தண்ணீர்ருக்குள்ளேயே தவித்துக்கொண்டிருந்தது நரி. பத்து நாட்கள் கடந்து போனது. அன்னைக்கு அந்தப் பக்கமாக ஓர் ஆடு, மே… மே…ன்னு கத்திக்கொண்டே வந்தது. 
உடனே நரி உஷாரானது. இந்த ஆட்டை வைத்து எப்படியாவது மேலே வந்துவிட வேண்டும் என்று நரி நினைத்துக்கொண்டது. ஆடு அண்ணா, இங்கே வாயேன் என்று அன்போடு அழைத்தது நரி. கிணற்றில் இருந்து வந்த குரலைக் கேட்டதும், ஆடு எட்டிப் பார்த்தது. என்ன நரியாரே… தவறி விழுந்துட்டீயா? என்று கேட்டது ஆடு. சே… சே… நானாவது விழுவதாவது. நான் வேணும்னுதான் கிணற்றுக்குள்ளே இறங்கினேன். இந்தக் கிணற்றுத் தண்ணீர் ரொம்ப சுவையாக இருக்கு. நீ வேணும்னா இறங்கி வந்து குடிச்சுப்பாரேன் என்றது நரி. ஆடு கொஞ்சமும் யோசிக்கவில்லை. 
உடனே கிணற்றுக்குள் குதித்தது. நரியே… இந்தத் தண்ணீர் சுவையா ஒன்னும் இல்லையே… உன்னை நம்பி வந்தேன் பாரு… இப்போ எப்படி வெளியில போறது? என்று கேட்டது ஆடு. முதல்ல உன் மேலே ஏறி நான் வெளியே போறேன். அப்புறம் கையை நீட்டறேன். கையைப் பிடிச்சிக்கிட்டு நீயும் வெளியே வந்துடு என்றது நரி. ஆடும் ஒப்புக்கொண்டது. ஆடு மீது ஏறி நரி வெளியே வந்தது. ம்… கையை கொடு… என்னைச் சீக்கிரமா காப்பாத்து… என்றது ஆடு. உன்னை நான் எப்படிக் காப்பாத்துறது? எதைச் செஞ்சாலும் விவேகமா, புத்திசாலித்தனத்தோட செய்யணும். இப்போவாவது புரிஞ்சுக்க. நான் வரேன்னு சொல்லிவிட்டு நரி கிளம்பியது. தன் முட்டாள்தனத்தை நினைத்து ஆடு வருந்தியது.

இன்றைய செய்திகள்

15.09.21

📃 ஒடிசாவில் கனமழையால் வலுவிழந்த பாலத்தை கடந்து சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டது.                     
📃 மாஸ்கோ: ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் ஊழியர்களுக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டதால், அதிபர் விளாடிமிர் புடின் தனிமைப்படுத்தி கொண்டார்   .                  

📃 சென்னை: ‛‛நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்,” என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.               

📃 சென்னை: ‛‛தமிழகத்தில் மீண்டும் வருகிற 17-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும்,” என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

📃 ஐ.சி.சி. மாதந்தோறும் சிறப்பாக விளையாடிய வீரர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் ஆண்களுக்கான கிரிக்கெட்டில் ஆகஸ்ட் மாதம் சிறந்த வீரராக இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Today’s Headlines

 ️⃣ A freight train derailed crossing a bridge weakened by heavy rains in Odisha.  *                   
 ️⃣ MOSCOW: President Vladimir Putin had isolated himself after corona was confirmed to Kremlin, Staff in the Russian presidential palace.        

 ️⃣ Chennai: There will be heavy rain in one or two places in the Nilgiris district, ” said Puviarasan, director of the Chennai Meteorological Center.  

 ️⃣ Chennai: A mega vaccination camp will be held in Tamil Nadu on the 17th, ” said the Minister of People’s Welfare Ma Subramanian.

 ️⃣  Each month,  the best players are selected and awarded by ICC. England captain Joe Root has been named the best player in men’s cricket in August.


Prepared by
Covai women ICT_போதிமரம்

[ad_2]

Leave a Comment