பள்ளி மற்றும் கல்லூரிகளில் மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்…? அரசுக்கு பரிந்துரை!


” பள்ளிகளிலும் மீண்டும் ஆன்லைன் வகுப்புகளை துவங்க வேண்டும் என்றும் கல்லூரிகளில் சுழற்சி முறையில் வகுப்புகளை தொடர்வது குறித்து அரசுக்கு பரிந்துரை”

தமிழகத்திலும் கொரோனா பரவல் மற்றும் ஒமிக்ரான் வைரஸின் புதிய பாதிப்புகள் எதிர்பாராதவிதமாக உயர்ந்து கொண்டு இருக்கிறது. இப்படி இருக்க கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதத்தில் ஜனவரி 10ம் தேதி வரை தமிழகம் முழுவதும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஜனவரி 10 வரை பள்ளிகளில் 1 முதல் 8 வரையுள்ள வகுப்புகளுக்கு மட்டும் விடுமுறை அளித்திருக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. மருத்துவ வல்லுனர்களுடனான இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.


Leave a Comment