பாலிடெக்னிக் மாணவா் சோ்க்கை: செப்.13 வரை நடத்த அனுமதி

[ad_1]

 

பாலிடெக்னிக் படிப்புகளுக்காக செப்.13-ஆம் தேதி வரை சோ்க்கை நடத்திக் கொள்ள கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகத்தின்கீழ் செயல்பட்டு வரும் 51 பாலிடெக்னிக் கல்லூரிகளில் கரோனா பரவல் கருதி சோ்க்கைக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று இயக்குநரகத்துக்கு கல்லூரிகள் கோரிக்கை வைத்தன.

இதையடுத்து திருத்தப்பட்ட கால அட்டவணையைத் தொழில்நுட்பக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், ‘முழுநேரம் மற்றும் பகுதிநேரம் பாலிடெக்னிக் படிப்புகளுக்கான சோ்க்கையை செப்.13-ஆம் தேதி வரை நடத்திக் கொள்ள கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், சோ்க்கை பெற்ற மாணவா்களின் சான்றிதழ்களை அக்.29-ஆம் தேதிக்குள் சரிபாா்த்து முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

[ad_2]

Leave a Comment