போகிப் பண்டிகையை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் ஆசிரியர் சங்கம் கோரிக்கை!


அனுப்புநர்:-

                     ஆ.இராமு,

      மாநிலத் தலைவர்,

நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்,

        DRPGTA,

       7373761517.

பெறுநர்:-

        மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், 

தலைமை செயலகம்,

சென்னை-9.

ஐயா,(பணிவோடு வணங்குகிறேன்)

       பொருள்:-போகிப் பண்டிகையை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டுதல் சார்பு

வணக்கம்,

       தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம், மற்றும் விவசாயிகளின் உயர்வைப் போற்றும் வகையில் தமிழகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவது பொங்கல் பண்டிகை ஆகும்.

அதற்கு முந்தைய நாளான போகி பொங்கல் விழாவும் தமிழர்களுடைய உள்ளங்களிலும் இல்லங்களிலும் மிக முக்கியமான இடத்தை காலங்காலமாக பெற்று வருகிறது. 

ஆண்டுக்கு ஒருமுறை வீட்டில் உள்ள அனைவரும் வீட்டையும், வீட்டில் உள்ள பொருட்களையும் தூய்மைப்படுத்தி பராமரிப்பு செய்து பழையன கழிதலும் புதியன புகுதலும் செய்யும் முக்கிய விழாவாகும்.

மேலும் மார்கழிக்கு பிறகு தொடங்கும் தை மாதத்தை, அறுவடை காலத்தை வரவேற்பதற்கான ஆயத்த நாளாக இந்நாள் பன்னெடுங்காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தமிழர்களின் பாராம்பரியம் மற்றும் பண்பாட்டு விழாக்களுக்கு வலுசேர்க்கும் விதமாக போகிப் பண்டிகையை அரசு விடுமுறையாக அறிவிக்க

 உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்…

             இப்படிக்கு

             ஆ.இராமு

               DRPGTA

இடம்: நாமக்கல்

நாள்:12.01.22.

நகல்

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய 

தமிழக அரசு தலைமைச் செயலாளர் அவர்கள், தலைமை செயலகம், சென்னை 9.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் முதன்மைச் செயலாளர் அவர்கள், தலைமைச் செயலகம், சென்னை 9.


Leave a Comment