மாணவர்கள் அட்டூழியம்! – ஆசிரியர்களின் செயலும் காரணம்!


தொடர்ந்து நமது மனக்குமுறல்களை கொட்டுவதோடு நில்லாமல் தீர்க்கவேண்டிய தீர்வு காணப்பட வேண்டிய செயல்கள் குறித்து சிந்திப்போம்.

  
நமது அடிப்படைக் கோரிக்கைகளை அரசிடம் எடுத்துச் செல்வோம். அவையாவன, *ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு.. மிகவும் முக்கியமானதும் தலையாய ஒன்றும் ஆகும்.
• பள்ளிக்கு மாணவனின் வருகை மிகவும் முக்கியமானதாகும் அனைவருக்கும் தேர்ச்சி என்ற ஒன்றை மாணவன் தனக்கு சாதகமாக வைத்துக்கொண்டு பெரும்பாலான நாட்கள் பள்ளிக்கு வராமல் இருக்கின்றான். எனவே , குறைந்தது 75 சதவீதம் வருகை இருந்தால் மட்டுமே அவன் அடுத்த வகுப்பிற்கு அனுப்பப்படுவான் என்ற விதி கட்டாயமாக்கப்பட வேண்டும்.
 தொடர்ந்து பள்ளிக்கு வராத மாணவனுக்கு எவ்வித சலுகைகளும் அடுத்த ஆண்டு வழங்காமல் இருக்க வேண்டும்.
ஆசிரியர்களைக் கற்றல் கற்பித்தல் நாட்களில் எந்தவித மாற்றுப் பணிக்கோ அல்லது பயிற்சிக்கோ அழைக்கக் கூடாது.
 ஆசிரியர்களுக்கு, கற்பித்தல் தவிர பிற பணிகள் கொடுக்கக்கூடாது.
 ஆசிரியர்களின் கலந்தாய்வு பிற பணிகள் அனைத்தும் கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்னரே முடிக்கப்பட வேண்டும்.
 கல்வியாண்டின் நடுவில் எந்த மாற்றமும் இருக்கக்கூடாது.
கண்டிப்பில்லாத கல்வியால் எவ்விதப் பயனுமில்லை ஒரு மாணவனை நல்ல ஒரு குடிமகனாக மாற்றுவதில் பெற்றோர் ,ஆசிரியர் ,சமூகம் ,அரசு என அனைவருக்கும் முக்கிய பங்கு உண்டு . இதில் நம் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவனின் பெரும்பாலான பெற்றோர் அவனுடைய ஒழுக்கத்தையும் நடத்தையையும் பற்றிய போதிய புரிதல் இன்றி இருக்கின்றார்கள். எனவே , அதனைத் தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் ஆசிரியருக்கு ஏற்படுகிறது. அது அவரின் கடமையும் கூட. ஆனால், ஆசிரியரின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன . 
 ஆசிரியர்கள் மட்டுமே மொத்த பளுவையும் தாங்கிப் பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். ஆசிரியர்களுக்கு நம் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களோ சமூகமோ எந்தவித பாரபட்சமின்றி எந்த விதத்திலும் பக்கபலமாகவோ ஆதரவாகவோ இருக்காது என்பது நிதர்சனமான உண்மை.
 இதற்கு ஆசிரியர்களில் ஒரு 5 சதவீத ஆசிரியர்களின் செயல்களும் காரணம் என்பதையும் மறுக்க இயலாது . தற்போது உள்ள நிலையில் மாணவ சமுதாயத்தின் எதிர்காலத்தை உயர்த்தி நிறுத்தவும் அவர்களை செம்மையாக நல்வழிப்படுத்த இருக்கும் ஒரே வழி பள்ளியும் ஆசிரியர்களும் தான் . எனவே அரசிடம் நாம் வைக்க வேண்டிய முக்கியமான கோரிக்கை தகாத செயல்களில் ஈடுபடும் மாணவர்களைக் கண்டிக்கும் நன்கு கவனிக்கவும் தண்டிக்கும் அல்ல கண்டிக்கும் உரிமைகளை ஆசிரியர் சமுதாயத்திற்கு அளிப்பது. கல்வி மற்றும் தேர்வு தொடர்பான பிற பிற செய்திகள் ஆசிரியர்களுக்குத் தெரியும் முன்பே ஊடகங்கள் வாயிலாக மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரிவது போல தகாத செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்பதை அரசு ஊடகங்கள் வாயிலாகத் தெரிவிக்க வேண்டும் . அரசும் ஆசிரியர்களும் முழு புரிந்துணர்வோடு செயல்படுவதன் மூலம் கண்டிப்பாக நம் இளைய சமுதாயத்தை எதிர்கால சந்ததியினரை நல்ல குடிமகன்களாக மீட்டெடுக்க முடியும் இதனை முன்வைத்து நாம் அரசுக்கு நம்பிக்கையுடன் ஒரு கோரிக்கை வைப்போம்.ஆசிரியர்களின் சுயமரியாதையைக் காப்போம்! இளைய சமுதாயத்தின் மாண்பை மீட்டெடுப்போம்!!!.
க சுபஸ்ரீ
உடுமலைப்பேட்டை


Leave a Comment