மாணவ , மாணவியரின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைமை ஆசிரியர்களுக்கு கூடுதல் அறிவுரைகள் வழங்கி பள்ளி கல்வி ஆணையர் உத்தரவு

[ad_1]

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் மருத்துவ வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து 01.09.2021 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பார்வையில் கண்ட அரசு வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டு பள்ளிகள் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றன.

 மாணவ மாணவியரின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைமை ஆசிரியர்கள் கீழ்காணும் இனங்கள் மீதும் கூடுதல் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் :

 1. மாணவ / மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆசிரியரல்லாத பணியாளர்கள் பள்ளிகளுக்குள் நுழையும் போதே உடல் வெப்பமானி கொண்டு பரிசோதனை செய்யப்பட வேண்டும். உடல் வெப்பநிலை அதிகம் இருப்பின் அவர்கள் பள்ளிகளுக்குள் அனுமதிக்காமல் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்திட வேண்டும்.

2. அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் . அனைத்து ஆசிரியர்களும் முகக்கவசம் அணிந்து மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழவேண்டும் . மாணவர்கள் பள்ளிக்குள் நுழையும் போது கிருமிநாசினி , சோப் கொண்டு கைகளை சுத்தம் செய்வதை உறுதி செய்தல் வேண்டும். 

3. சமூக இடைவெளி கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் , பள்ளி நேரங்களில் கூட்டம் சேராமல் போதிய இடைவெளியுடன் இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.

4 , பள்ளிக்கு தொடர்பில்லாத நபர்கள் பள்ளிக்குள் நுழைவதை அனுமதித்திட வேண்டாம்.

மேற்காண் அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

[ad_2]

Leave a Comment