மாநில நல்லாசிரியர் விருதுக்கு 385 பேர் தேர்வு

[ad_1]

தமிழகத்
தில் நிகழ் கல்வியாண்டில் ( 2021-2022 ) மாநில நல்லாசிரியர் விருதுக்கு
தேர்வு பெற்றுள்ள 385 ஆசிரியர்களின் பட்டியல் மாவட்டங்களுக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது. குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த
நாளான செப் .5 – ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ஆசிரியர்
தினவிழாவாக கொண்டாடப்பட்டு அந்த விழாவில் தொடக்க , நடுநிலை , உயர்நிலை ,
மேல்நிலைப் பள்ளி களில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களைத் தேர்வு
செய்து அவர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதான ‘ டாக்டர் ராதாகிருஷ்ணன்
நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுவருகிறது. இந்த விருதுடன் ரூ .10 ஆயிரம் ,
வெள்ளிப் பதக்கம் ஆகியவை வழங்கப்படும்.

அந்த
வகையில் நிகழ் கல்வியாண்டுக்கான சிறந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்ய மாவட்ட
, மாநில அளவிலான குழுக்களை பள்ளிக் கல்வித்துறை நியமித்தது.

இதையடுத்து
தொடக்க , நடுநிலைப் பள்ளிகளில் 171 ஆசிரியர்கள் ; உயர்நிலை , மேல்நிலைப்
பள்ளிகளில் 171 ஆசிரியர்கள் ; மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் 37 பேர் ,
ஆங்கிலோ இந்தியப் பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் ; சமூகப்பாதுகாப்புத் துறை
பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் ; மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் இருவர் என
மொத்தம் 385 ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு
தேர்வு பெற்றுள்ளனர். இந்தப் பட்டியல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் வழங்குகிறார் :

இவற்றில்
5 ஆசிரியர்களுக்கு மட்டும் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள விழாவில்
முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கவுள்ளார். எஞ்சிய ஆசிரியர்களுக்கு
அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் , மக்களவை , சட்டப்பேரவை உறுப்பினர்களால் ஓரிரு
நாள்களில் விருது கள் வழங்கப்படவுள்ளன . இது குறித்து கல்வித்துறை
அதிகாரிகள் கூறியது : இதுவரை ல்லாத அளவுக்கு நிகழாண்டு இளைய தலைமுறை ஆசிரி
யர்கள் அதிகளவில் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர். புதுமையான கற்பித்தல் ,
கல் விக்கான செயலிகள் வடிவமைத் தல் , பள்ளிகளில் சுற்றுச் சூழலை
மேம்படுத்துதல் , மாணவர் சேர்க் கையை உயர்த்துதல் போன்ற வற்றில் சிறப்பாக
செயல்பட்ட ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர் என அவர்கள்
தெரிவித்தனர்.

[ad_2]

Leave a Comment