மாநில பாடத்திட்டத்தில் இருந்து நீட் தேர்வில் 165 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல்.

[ad_1]

 IMG-20210914-WA0006  எம்.பி.பி.எஸ்.,
பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட்
நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நேற்று நடந்து முடிந்தது. கொரோனாவால் தள்ளி
வைக்கப்பட்டு நடந்த தேர்வை 3,862 மையங்களில் 16.14 லட்சம் பேர் எழுதினர்.
தமிழ், மலையாளம், பஞ்சாபி மொழிகள் முதன் முறையாக சேர்க்கப்பட்டு மொத்தம் 13
மொழிகளில் தேர்வு நடந்தது.

தமிழ்நாட்டில் 70 ஆயிரம்
மாணவிகள், 40 ஆயிரம் மாணவர்கள் என மொத்தம் 1.10 லட்சம் பேர் தேர்வு
எழுதினர். தமிழ்நாட்டில் 18 நகரங்களில் உள்ள 224 மையங்களில் இளநிலை நீட்
தேர்வு நேற்று பிற்பகல் 02.00 மணிக்கு தொடங்கிய நிலையில் தேர்வு மாலை 05.00
மணிக்கு முடிந்தது. அதேபோல் புதுச்சேரியில் 14 மையங்களில் நீட் தேர்வை
7,123 மாணவ, மாணவிகள் எழுதினர்.

இந்நிலையில், நேற்று
நடந்த நீட் நுழைவுத் தேர்வில் தமிழக அரசு பாடத்திட்டத்தில் இருந்து 200க்கு
165 கேள்விகள் இடம் பெற்றிருப்பதாக பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.
நீட் தேர்வில் இயற்பியல் பாடத்தில் பி பிரிவு கேள்விகள் கடினமாக இருந்ததாக
பெரும்பாலான மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.

மற்ற பகுதிகள்
எளிமையாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்திருந்த நிலையில், மாநில அரசு
பாடத்திட்டத்தில் இருந்து எத்தனை கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கின்றன என்ற
தகவலை பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.

அதன்படி, இயற்பியல்
பாடத்தில் 50க்கு 48 கேள்விகளும், வேதியியல் பாடத்தில் 50க்கு 38
கேள்விகளும் இடம் பெற்றிருந்ததாகவும், தாவரவியல் பாடத்தில் 50க்கு 34
கேள்விகளும், விலங்கியல் பாடத்தில் 50க்கு 45 கேள்விகளும் என ஒட்டு
மொத்தமாக 200க்கு, 165 கேள்விகள் மாநில அரசு பாடத்திட்டத்தில் இருந்து
இடம்பெற்றிருப்பதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது

[ad_2]

Leave a Comment