இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை. ஒரு மாதம் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 13ம் தேதி 1 முதல் 9 வரையிலான வகுப்புகள் தொடங்கும். தமிழகத்தில் ஜூன் 2ம் தேதி முதல் 12 வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கும். ஜூன் 23-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். 11ம்வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் 7ம் தேதி வெளியாகும். 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 17ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது.