பள்ளிக் கல்வித் துறை 2021-2022 , 2022-23 கல்வி மானியக் கோரிக்கையில் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் சட்டப் பேரவையில் ” கிராமப்புற நூலகங்களில் மின் நூலக சேவை ” என்ற தலைப்பில் சர்வதேச நாளிதழ்கள் , பருவ இதழ்கள் கிராமப்புறங்களில் உள்ள வாசகர்களுக்கும் கிடைக்கும் வண்ணம் கிளை நூலகங்கள் மற்றும் ஊர்ப்புற நூலகங்களில் மின் நூலகம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ .2.40 கோடியில் ஏற்படுத்தப்படும் ” எனவும் ” தமிழ்நாடு அரசு பொது நூலகங்களை நாடிவரும் வாசகர்கள் மற்றும் போட்டித் தேர்வு மாணவர்கள் பயன்பெறும் வகையில் 352 நூலகங்களில் இலவச wi – fi இணைய வசதி ரூ .23.40 இலட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும் எனவும் அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதன் தொடர்ச்சியாக முதற்கட்டமாக 500 பொது நூலகங்களில் Wi – fi இணைய வசதி துவங்கப்பட உள்ளது.