இதைத் தொடர்ந்து ஜேஇஇ 2-ம் கட்ட முதல்நிலைத் தேர்வு ஏப்.6 முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ள நகரங்களின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
அந்த விவரங்களை jeemain.nta.nic.in என்றஇணையதளத்தில் சென்று மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். தேர்வுக்கான ஹால்டிக்கெட் விரைவில் வெளியிடப்படும். கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற என்டிஏ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை(என்டிஏ) தெரிவித்துள்ளது.