TNPSC – தமிழ், அறிவியல், பொதுஅறிவு இலவச ஆன்லைன் தேர்வுகள், படிக்க பயனுள்ள மெட்டீரியல்!!


நடப்பு நிகழ்வுகள்

இந்திய கடற்படைக்கு போயிங் 11 ஆவது பி -81 விமானம் * அமெரிக்க விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங்கிடமிருந்து 11 – ஆவது பி -81 நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு போர் விமானத்தை இந்திய கடற்படைபெற்றுக்கொண்டது . 

கடந்த 2009 – ஆம் ஆண்டு போயிங் நிறுவனத்திடம் இருந்து 8 பி -81 விமானங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டது . அந்த விமானங்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் , மேலும் 4 பி -81 விமானங்களை வாங்க 2016 ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது . அந்த ஒப்பந்தத்தின்படி மூன்றாவது பி -81 விமானம் இந்திய கடற்படையிடம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது . 

இந்திய விமானப்படை வீரர்களுடன் சந்திப்பு . இந்தியா , அமெரிக்கா , பிரிட்டன் , ஜெர்மனி , பிரான்ஸ் , இத்தாலி , கிரீஸ் , இஸ்ரேல் ஆகிய 8 நாடுகளின் விமானப் படைகள் பங்கேற்கும் ‘ புளூஃப்ளாக் ‘ ( நீலக் கொடி ) கூட்டுப் பயிற்சி ஜெருசலேம் நகரில் நடைபெற்று வருகிறது . அதில் இந்திய விமானப் படையைச் சேர்ந்த 85 வீரர் கள் பங்கேற்றுள்ளனர் . 

 ‘ மிராஜ் 2000 ‘ போர் விமானங்கள் உள்ளிட்டவையும் இந்தியா சார்பில் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றுள்ளன . இக்கூட்டுப் பயிற்சி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது . 

ராணுவ பொறியியல் திட்டங்களை கண்காணிக்க  பொறியாளர் சேவைகளுக்கான இணையவழியில் வலைதளத்தை  ராணுவப் திட்டப்பணிகளை கண்காணிப்பதற்காக தனி வலைதளம் தொடக்கம்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடக்கி வைத்தார் . 

இந்த வலைதளத்தை எண்ம இந்தியா        ( டிஜிட்டல் இந்தியா ) திட்டப்படி விண்வெளிப் பயன்பாடுகள் மற்றும் புவி தகவல்களுக்கான பாஸ்கராச்சார்யா தேசிய மையம் உருவாக்கியுள்ளது .

தினமும் இலவச                             ஆன்லைன்    தேர்வெழுத 

Touch Here

Current Affairs

Touch Here

Tamil Important Material 

Touch Here

Polity Important Material

Touch Here

TNPSC LATEST Material

Touch Here


Leave a Comment