Vivo s7 5G Smartphone Launches in India August 3: Specification and Price

Vivo s7 5G Smartphone Launches in India August 3: Specification and Price

Vivo S7 5G மொபைல் August 3 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மொபைலில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் மற்றும் விலை பற்றி பார்க்கலாம்.

Vivo V7 5G Smartphone

இந்த மொபைல் ஆனது சமீபத்தில் வெளியான விவோ S6 ன் அடுத்த பரிணாமமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைலை பற்றிய தகவல்கள் கடந்த சில நாட்களாக Online ல் வெளியாகி உள்ளது. மேலும் விவோ நிறுவனம் கேமரா அம்சங்கள் மற்றும் மொபைலின் வடிவமைப்பை வெளிப்படுத்தும் வகையில் Teaser ஒன்றை வெளியிட்டுள்ளது.

Teaser மூலம் தெரியப்படும் அம்சங்கள் :

விவோ s7 5ஜி மொபைலில் இரண்டு செல்பி கேமரா இருக்கும் என இந்த டீசர் மூலம் தெரிகிறது மேலும் ஆட்டோ போகஸ் சென்சார் உடன் 44 எம்பி செல்பி கேமரா இருக்கலாம் என டீசர் உறுதிப்படுத்தியுள்ளது விவோ ஏழு மொபைலின் பின்புறத்தில் செவ்வக வடிவிலான கேமரா அமைப்பு இருக்கும் என்பது டீசர் மூலம் தெரிகிறது.

Camera Specs

விவோ s7 5ஜி மொபைல் இன் பின்புற கேமராக்களை பொருத்த வரை 64 Mb முதன்மை சென்சார் ஆகவும், சாம்சங் GW சென்சார் மற்றும் சூப்பர் Wide angle சென்சார் 8 எம்பி மற்றும் 13 எம்பி கொண்ட சாம்சங் போர்ட்ரேட் சென்சார் சிறப்பம்சங்கள் இருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.

Fingerprint Sensor

டீசரை பொருத்தவரை விவோ s7 5ஜி மொபைலில் கைரேகை சென்சார் கொடுக்கப்படவில்லை. அதாவது பின்புறத்தில் கொடுக்கப்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

பாதுகாப்பு காரணங்கள் கருதி இன் டிஸ்பிளே பிங்கர்ப்ரின்ட் சென்சர் கொடுக்கப்பட்டிருக்கலாம் என நாம் எதிர்பார்க்கலாம். மற்றும் இந்த மொபைலின் ஸ்கிரீன் அளவு எவ்வளவு என்பது தெளிவாக அறியப்படவில்லை. இருந்தாலும் இந்த மொபைல் ஃபுல் ஹெச்டி பிளஸ் Amoled panel ஐ கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Processor

விவோ s7 5ஜி மொபைல் ஸ்னாப்டிராகன் 765 G ப்ராசசர் மூலம் இயக்கப்படும் என்று தெளிவான தகவல்கள் நமக்கு தெரிகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 10 os மேல் Funtouch UI மூலம் இயங்கும்.

இந்த மொபைல் 5ஜி ஆதரவுடன் நமக்கு கிடைக்கும் மற்றும் இதில் எத்தனை வேரியண்ட் கிடைக்கும் என்பது பற்றிய தெளிவான தகவல்கள் இல்லை. மேலும் ரேம் மற்றும் இன்டர்னல் ஸ்டோரேஜ் பற்றிய தெளிவான தகவல்களும் கிடைக்கவில்லை.

Battery அளவு குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை

இந்த மொபைல் பற்றிய பேட்டரி அளவு குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. கிடைக்கப்பட்ட சில தகவல்களின் படி அதிவேக சார்ஜிங் சிறப்பம்சம் கொண்டிருக்கலாம் என தெரிகிறது. மேலும் இந்த மொபைல் நமக்கு மூன்று வண்ணங்களில் கிடைக்கும் நீலம், கருப்பு  மற்றும் வெள்ளை என மூன்று வண்ணங்கள் இந்த மொபைலின் வர்ணங்கள் ஆகும்.

Leave a Comment